கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல்துறையினர் நடந்தே சென்று (Foot Patrol) ரோந்து பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் திருமதி. இளவரசி, கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் திரு. ஏழுமலை, புவனகிரி காவல் ஆய்வாளர் திரு. தேவேந்திரன், பெண்ணாடம் காவல் ஆய்வாளர் திரு. சரவணன், சிதம்பரம் நகர் காவல் உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார், கருவேப்பிலங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திரு. பாக்கியராஜ் ஆகியோர்கள் தலைமையில் காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய கடைவீதிகள் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் நடந்து சென்று (Foot Patrol) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியும், மேலும் குற்றம், களவு எதுவும் நடக்காமல் கண்காணித்து தீவிர ரோந்து பணியினை நடந்தே சென்று ( Foot Patrol) மேற்கொண்டர்கள்.


