முகப்புதமிழகம்.நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன?

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன?

பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

சென்னை: நேபாள பெரு­வெள்­ளத்­ தில் சிக்­கிய தமி­ழர்­கள் நிலை குறித்து சட்­டப்­பே­ரவை­யில் பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர் ராஜ்­மோ கன் விளக்­க­ம­ளித்­தார். மேலும், தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 103 பேர் நேபா­ளம் சென்­றி­ருந்­த­னர். இவர்­க ளில், கும்­ப­கோணத்­தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்­தி­ர­மாகமீட்­கப்­ பட்­டுள்­ள­னர் என்று அமைச்­சர் விவ­ரித்­தார். தமி­ழ­கத்­தில் இருந்து நேபா­ளம் சென்­ற­வர்­கள் வெள்­ளத்­தில் சிக்­கி­யது குறித்து எதிர்க்­கட்­சி­கள் கவன ஈர்ப்பு தீர்­மா­னம் கொண்டு வந்­தன. அதன்­ மீது, அமைச்­சர் ராஜ்­மோ கன் பேசு­கை­யில், “நேபாள கைலாஷ் யாத்­தி­ ரைக்கு தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 103 பேர் சென்­றி­ ருந்­த­னர். இந்­நி­லை­யில் நேபா­ளத்­தில் திடீர் வெள் ளபெ­ருக்கு ஏற்­பட்­டது. இந்த வெள்­ளத்­தில் 384 சுற்­று­லாப் பய­ணி­க­ளும் சிக்­கி­னர். இதில் 291 பேர் வெளி­நாட்­டி­னர். 93 பேர் நேபாள நாட்­டைச் சேர்ந்­த வர்­கள்.இது­வரை 209 பயணி­கள் மீட்­கப்­பட்­டுள்­ள ­னர். இதில் 75 பேருக்கு தீவி­ரக் காயம் ஏற்­பட்­ டுள்­ளது. 21 தமி­ழர்­கள் மீட்பு: தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 103 பேர் நேபா­ளம் சென்­ றி­ருந்­த­னர். இவர்­க­ளில் கும்­ப­கோணத்­தில்இருந்து சென்ற 57 பேரில் 21 பேர் பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டு ள்­ள­னர். அவர்­களை அழைத்து வர நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டுள் ளது. சென்னை குரோம்­ பேட்டை மகா­தேவ் கை லாஷ் ஏஜென்ஸி மூலம் நேபா­ளத்­துக்கு கைலாஷ் யாத்­திரை சென்­ற­வர்­க ளின் விவ­ரம் குறி த்து கண் கா­ணித்து வரு­கி­றோம். பாதிக்­கப்­பட்ட மக்­க ளுக்கு அரசு துணை­யாக இருக்­கும். நேபாள போலீஸ் உள்­ளிட்ட அனைத்து துறை­க­ளு­டன் இணைந்து தேடு­தல் பணி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. காத்­மாண்­டு­வில் உள்ள இந்­திய தூத­ர­கத்­தி­டம் தொடர்­பில் இருக்­கி­ றோம். பாதிக்­கப்­பட்­ட­வர்­ கள் தொடர்பு கொள்­ள வும், அவ ர்­க ­ளின் குடும்­பத்­தி­னர் தொடர்பு கொள்­ள­வும் உதவி எண் கள் அறி­விக்­கப்­பட்­டுள்ளன” எனத் தெரி­வித்­தார்.

முந்தைய கட்டுரை
அடுத்த கட்டுரை
RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments