கடலூர் அடுத்த சிதம்பரம் சாலையில் உள்ள மேட்டுப்பாளையம் ஜி.ஆர்.கே. எஸ்டேட்ஸ் ராசி தோட்டத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 17- தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
இதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று 13-ந் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி அஷ்ட லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் நடைபெற்றது.
ஜி.ஆர்.கே.குழும நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.துரைராஜ் ,இயக்குனர் கோமதி துரைராஜ், கோகுல் ராதாகிருஷ்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.
விழாவில் சுற்றுப்புற கிராம பொதுமக்கள், ஜி.ஆர்.கே.குழும அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி நடந்தது.
இன்று 14ம் தேதி (திங்கட்கிழமை) சாந்தி ஹோமம்,மாலை திசா ஹோமமும், நாளை 15-ந் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கி வேத பாராயணம், பூர்ணாஹதி நடைபெற உள்ளது. 16-ந் தேதி காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜை, நவசக்தி அர்ச்சனை, மூல ‘மந்திர ஹோமம் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு வருகிற 17-த் தேதி(வியாழக்கிழமை) யாகசாலை பூஜை, வேத பாராயணம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 9.30 மணி அளவில் யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக புறப்பட்டு காலை 9.45 மணிக்கு விஷ்ணு துர்க்கை அம்மன் சன்னதி, 10 மணியளவில் விநாயகர், முருகன், மூலவர் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆகிய சன்னதிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேச விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே. எஸ்டேட்ஸ் நிர்வா இயக்குனர் ஜி.ஆர்.துரைராஜு ,இயக்குனர் கோமதி துரைராஜ்,கோகுல் ராதாகிருஷ்ண ஆகியோர் செய்து வருகின்றன.


