கடலூர் RTO அலுவலகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் மரியாதை நிமித்த சந்திப்பு – 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
கடலூர், செப்.15:
கடலூர் – பண்ருட்டி தாலுகா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று 15.09.2026 காலை 11 மணியளவில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. ஞானப்பிரகாசம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 திரு. ஆனந்த் ஆகியோரை சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பங்கேற்ற நிர்வாகிகள்:
சங்க தலைவர் AR. வேலவன், செயலாளர் டாக்டர் V. சதீஷ்குமார் MBBS, பொருளாளர் P. சிவாஜி, துணைத் தலைவர் குபேந்திரன், ஆட்டோமொபைல்ஸ் இயக்குநர்கள் யுவராஜ் மற்றும் KTR சக்தி, நிர்வாக இயக்குநர் மாரியப்பன், கமிட்டி உறுப்பினர்கள் ரவி, நடராஜன், மற்றும் முக்கிய உறுப்பினர்கள் சாய்குமார், அர்ஜுன், ராஜவேல், சிவா, ஸ்ரீனிவாசன் SLT, சேரன், பிரவீன் குமார், யாசின் பாய் உள்ளிட்ட திரளான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சதீஷ்குமார் அவர்கள் அனைத்து பிரச்சினைகளையும் ஆவணங்களுடன் விரிவாக எடுத்துரைத்து, அனைத்து ஆவணங்களையும் RTO அவர்களின் பரிசீலனைக்கு சமர்ப்பித்தார்.
விவாதிக்கப்பட்ட 10 முக்கிய அம்சங்கள்:
- வெற்றி பயணம் – அக்டோபர் 2 பட்டியல்: அக்டோபர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் கடலூர் – சிதம்பரம், கடலூர் – விருத்தாசலம், கடலூர் – விழுப்புரம் (மாளிகைமேடு வழி), கடலூர் – திருவண்ணாமலை, கடலூர் – திருக்கோவிலூர் ஆகிய வழித்தடங்களில் இயக்க அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை வழங்க வேண்டும். நேர அனுமதி இல்லாமல் சீரற்ற முறையில் இயக்கினால் பேருந்து நிலையத்தில் மோதல் ஏற்படும் என்பதால் முறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு RTO ஒழுங்குபடுத்துவதாக உறுதியளித்தார்.
- TNSTC தற்காலிக நேர அனுமதி: அரசு பேருந்துகள் முறையான நேர அனுமதி இன்றி இயங்குவது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.
- அதிக கட்டணம் & சுற்று வழித்தடம்: சில வழித்தடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் வழித்தடத்தை மாற்றி இயக்குவது குறித்து முறையிடப்பட்டது.
- ஆட்டோ & ஷேர் ஆட்டோ பிரச்சனை: கடலூர் நகரில் சட்டவிரோதமாக இயங்கும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களால் தனியார் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் அளிக்கப்பட்டது.
- RTI பதில்கள்: RTO அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட்ட பல்வேறு தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- ISA இன்றி PRTC இயக்கம்: சங்கத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி PRTC பேருந்துகள் ISA இன்றி இயங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- கூடுதல் கி.மீ. கட்டண அனுமதி: கூடுதல் கிலோ மீட்டருக்கான கட்டண அனுமதியை விரைவில் வழங்க வேண்டும் என கோரிக்கை.
- நிலுவை கோப்புகள்: உறுப்பினர்களின் RTO அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக நகர்த்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை.
- CNG-யில் இருந்து டீசலுக்கு மாற்றம்: 3 உறுப்பினர்களின் வாகனங்களை CNG-யில் இருந்து மீண்டும் டீசலுக்கு மாற்றுவதற்கான ஒப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
- Charge Memo: உறுப்பினர்கள் மீதான Charge Memo-க்களை குறைந்தபட்ச அபராதத்துடன் முடித்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.



