கடலூர் அருகே அயன் ராமாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி51 அடி ஸ்ரீ குரு குகன் முருகனின் மகா கும்பாபிஷேகம். கடலூர் அருகே அயன் ராமாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி மற்றும் 51 அடி ஸ்ரீ குரு குகன் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்காம் கால பூஜை நடைபெற்றது. வேதபாராயணம் நாடி சந்தனம் தத்துவர்த்தனை பிராணப் பிரதிஷ்டை யாத்திரா தானம் மகாபூர்ணகுதி தீபா ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு ஸ்ரீ கணபதி 51 அடி குரு குகன் முருகன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது பக்தர்களுக்கு அருப்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை அயன் ராமாபுரம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். இரவு ஆறுபடை முருகன் ஆறு அலங்காரத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளத்துடன் வானவேடிக்கை உடன் வீதி உலா நடைபெற்றது.


