முகப்புஇந்தியாகடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கத்தின் சார்பாக ஐம்பெரும் விழா.

கடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கத்தின் சார்பாக ஐம்பெரும் விழா.

கடலூரில் கடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி வரி வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்க ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா கடலூர் எஸ் .ஆர் .ஜே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவிற்கு சங்கத்தின் தலைவர் போஸ். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் தண்டபாணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அர்ச்சகர் சங்க தலைவரும் சங்கத்தின் கவுரவ ஆலோசகரமாகிய மூத்த வழக்கறிஞர் எஸ். அருணாசலம் குத்துவிளக்கேற்றி முப்பெரும் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கடலூர் மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார் இஆப சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அளவில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விருதுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். திருக்குறள் தொண்டர் வழக்கறிஞர் வரம்.இராம இராதாகிருஷ்ணன் மற்றும் இந்திய ராணுவத்தின் புகழ் பரப்புனர் முன்னாள் ராணுவ வீரர் எஸ் .பாபு ஆகியோர் சாதனையாளர் விருது பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மற்றும் பண்ருட்டி பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மருத்துவர் வி சதீஷ்குமார். ஆடிட்டர் ரோட்டேரியன் சுந்தரமூர்த்தி மற்றும் லைன் சங்க தலைவி லயன்ஸ் உமாசங்கர் ஆகியோர் மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்துரை வழங்குகினார்கள். இந்த முப்பெரும் விழாவில் வழக்கறிஞர்கள் டி. தமிழரசன், ஏ. எஸ். வடசந்திரசேகரன், என். சபீனா ஆகியோர் சிறப்புரையாறறினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நம் கார்மேக வண்ணம் முகுந்தன் ராஜதுரை கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முப்பெரும் விழாவில் டாக்டர் தி.இராஜமச்சேந்திரசோழன், தங்கதுரை, கோபிநாத், பச்சையப்பன், மாணிக்கவாசகம், சுந்தரபாலன், தேவராஜன், வாணிவரதன், புருஷோத்தமன், ராஜி, வாணிவரதன் ,துரை செல்வம், பக்தவச்சலம் ,செல்வராஜ், ரவிச்சந்திரன், குணசேகரன், சௌந்தரராஜன் ,கண்ணன், உலகநாதன், அருள், பெருமாள், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முப்பெரும் விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள், சங்கத்தின் நிர்வாகிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments