கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜி. சுபத்ரா தேவி துவக்கி வைத்தார்.
கடலூர் மாநகராட்சி திருப்பாதிரிப்புலியூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கண்காட்சியை கடலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் முதன்மை மாவட்ட நீதிபதி ஜி சுபத்ரா தேவி அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். 06.08.26 வரை நடைபெற்ற உள்ளது. இந்த கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கைவினைகளால் உருவாக்கப்பட்ட பலவகை வண்ணமான கிருஷ்ணர் பொம்மைகள் மர சிற்பங்கள் தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் கலைத்தட்டுகள் செம்மரத்தினால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுப் பொருட்கள் காகித பொம்மைகள் பித்தளை விளக்குகள் பித்தளை சிலைகள் வெண்கல சிலைகள் வாகை மரத்தினால் உருவாக்கப்பட்ட பலவகை மர சிற்பங்கள் மற்றும் வீட்டு அழகப்பொருட்கள் நகை அணிகலன்கள் சுமிடிச் சேலைகள் மற்றும் பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட சிலைகள் சந்தன மாலைகள் பூஜை சாமான்கள் அகர்பத்தி மாலைகள் செம்பு பொருட்கள் பேப்பர் கூறினால் செய்யப்பட்ட தலையாட்டி பொம்மைகள் போன்ற பல வகையான பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் வாங்கும் பொருட்களுக்கு சிறப்பு தழுபடியாக 10% வழங்கப்படுகிறது. இந்த கிருஷ்ண தரிசனம் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் இரா கார்த்திக் விற்பனை உதவியாளர் ஐ சுடலைமுத்து கணக்கர் வி சந்தியா ஆகியோர் கண்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



