நெய்வேலி ஜெயப்பியா சினிமாஸ் திறப்பு விழா
விழுப்புரம் சரக டிஐஜி பங்கேற்று திறப்பு
நெய்வேலி மந்தாரக்குப்பம் கடலூர் மெயின் ரோட்டில் புதுப்பிக்கப்பட்ட ஜெயப்பிரியா சினிமாஸ் திறப்பு விழா நேற்று நடந்தது.
திறப்பு விழாவிற்கு ஜெயப்பிரியா குழும நிறுவனங்கள் நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார்.ஜெயப்பிரியா குழும நிறுவனங்கள் தலைவர் இராசகோபாலன் முன்னிலை வகித்தார்.ஜெய் நிதிஷ், ஜெய் நிஷிதா ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., அருளரசு பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட ஜெயப்பிரியா சினிமாஸ் அரங்கத்தை திறந்து வைத்தார். இயக்குநர்கள் அனிதா ஜெய்சங்கர், பத்மபிரியா வெங்கடேசன் ஆகியார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இது குறித்து நிர்வாக இயக்குநர் ஜெய்சங்கர் கூறியதாவது : ஜெயப்பிரியா சினிமாஸ் புதிய பொலிவுடன்அல்ட்ரா மாடர்ன் தொழில்நுட்ப வசதிகளுடன் நிதிஷ், நிஷிதா என்ற இரண்டு திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. புதிய உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் திரையரங்கம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
4 கே அல்ட்ரா எச்.டி லேசர் ப்ராஜெக்ஷனுடன் மிகத் தெளிவான, துல்லியமான காட்சி அனுபவத்துடன் டால்பி அட்மோஸ்டன் ஒலி அமைப்பு உள்ளது. தியேட்டரின் நாற்புறமும் சூழ்ந்து ஒலிக்கும் தத்ரூபமான சவுண்ட் சிஸ்டத்துடன்,படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப அசையும் அதிநவீன இருக்கை வசதிகள் மற்றும் சொகுசான பிரீமியம் சீட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் அதிநவீன 3 டி எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் பிரம்மாண்டமான இன்டீரியர் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவுகள் ‘புக் மை ேஷா’ என்ற இணைய தளத்தில் பதிவுகள் நடைபெற்று வருகின்றது என தெரிவித்தார்.
ஜெயப்பிரியா குழும நிறுவனங்களை சேர்ந்த பொது மேலாளர், முதன்மை மேலாளர்கள், உதவி முதன்மை மேலாளர்கள் மண்டல மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள், ஆடிட்மேலாளர், கோட்ட மேலாளர்கள், மேலாளர்கள்,பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள்,தொழிலதிபர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், வழக்கறிஞர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், தியேட்டர் உரிமையாளர்கள்,வியாபாரிகள், என்.எல்.சி., அதிகாரிகள், அரிமா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


