முகப்புதமிழகம்.புத்தக வாசிப்பால் பயனடைவது சமுதாயமா/ குடும்பமா பட்டிமன்றம்.

புத்தக வாசிப்பால் பயனடைவது சமுதாயமா/ குடும்பமா பட்டிமன்றம்.

கடலூர் மாவட்ட தமிழ் சங்கம் சார்பில் புத்தக வாசிப்பால் பயன் அடைவது சமுதாயமா அல்லது குடும்பமா பட்டிமன்றம்.

கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கம் சார்பாக ஆகாஷ் புத்தக விழாவில் சிறப்பு பட்டிமன்றம். கடலூர் கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ஆகாஷ் புத்தக விழாவில் சிறப்பு பட்டிமன்றம் கடலூர் மாவட்டம் ஆகாஷ் ஈதல் இதய அரங்கத்தில் நடைபெற்றது. இந்த பட்டிமன்றத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் ச.கு .பக்கிரான் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் மருத்துவர் இரா .தி. பொற்கைப் பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். புத்தக வாசிப்பால் பெரிதும் பயன் அடைவது சமுதாயமா அல்லது குடும்பமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இரா.ச. குழந்தை வேலனார் நடுவராக செயல்பட்டார். சமுதாயமே என்ற தலைப்பில் கவிஞர் க. எழழிலேந்தி, பேராசிரியர். வி. விசயலட்சுமி, கவிஞர் வே .விடுதலை ஆகியோர் பேசினார்கள். குடும்பமே என்ற தலைப்பில் கவிதாயினி வெற்றிச்செல்வி ,கவிஞர் ம. ரா. சிங்காரம், கவிஞர் மா. ச .ஆதிசங்கரன், ஆகியோர் பேசினார்கள். இறுதியில் செயற்குழு உறுப்பினர் ப. சிவக்குமார் நன்றி கூறினார். பட்டிமன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக கவிஞர் அன்பன் சிவா செயல்பட்டார். இந்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் பேராசிரியர்கள் கவிஞர்கள் பாவலர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments