முகப்புஇந்தியாடாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு.

டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு.

மானிய கோரிக்கை அறிவிப்பிற்காக காத்திருப்பு
போராட்டம் குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கடலூர், ஆக. 29: கடலூரில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில ஆலோசகர் சரவணன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் அல்லி மத்து பொருளாளர் பாலமுருகன் செயலாளர் இருதயராஜ் துணைத்தலைவர் ரூபன் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் கூறியதாவது:
கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுடைய கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேறாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு அடிப்படை காரணம் டாஸ்மாக் நிறுவனத்தில் இயங்கி வரக்கூடிய சங்கங்கள் ஒற்றுமையாக நின்று குரல் கொடுப்பதற்கான ஒரு நல்ல சூழ்நிலை ஏற்படுத்தப்படவில்லை என்பது தான் .
கோரிக்கைகள் தொடர்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
கூட்டுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வேலை நிறுத்தப் போராட்ட தீர்மானத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஏற்றுக்கொண்டது.
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதில் வருகிற 31. 8. 2026 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் துறை வாரியான மானிய கோரிக்கை அமல்படுத்துகிற போது டாஸ்மாக் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு 31. 8 .2026 அன்று அரசினுடைய அறிவிப்பு என்ன வருகிறது என்று பார்த்து அதை பரிசீலனை செய்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் பணியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கைகளை வலியுறுத்தி கிடைக்காத காரணத்தினால் மன உளைச்சலில் பணியாற்றக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட துறையின் மானிய கோரிக்கை எதிர்பார்த்து உள்ள நிலையில் கூட்டுக் குழு என்ன போராட்டம் அறிவிக்கிறதோ அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு நாம் தயாராக இருப்போம். வட்டத் தலைவர் ராஜேஷ் நன்றி கூறினார்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments