முகப்புஇந்தியாகாவல்துறையில் சிறப்பு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்

காவல்துறையில் சிறப்பு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்

2025–2026ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பிடித்த காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் காவல்துறையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகள் 8 மாணவர்கள் 2025 – 2026 கல்வி ஆண்டிற்கான சிறப்பு கல்வி ஊக்கத்தொகை பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 8 மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய சிறப்பு கல்வி ஊக்கத்தொகையின் முதல் தவணைத் தொகையை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, IPS அவர்கள் மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments