கடலூர் துறைமுகம் ஸ்ரீ கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் சுப்ரபாதம் திருப்பள்ளியெழுச்சி கோ பூஜை ஐந்தாம் கால ரோமங்கள் சதுஷ்டான பூஜை மகாபூர்ணா குரு யாத்திரா தானம் நடைபெற்றது பின்னர் மகா, கும்பங்கள் புறப்பட்டு விமானங்கள் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் தீபாரதனை காண்பிக்கப்பட்டு சற்று முறை பொதுமக்கள் தரிசனம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது இரவு திருக்கல்யாண நிகழ்ச்சியில் மகா உற்சவம் நடைபெற்றது. சுவாமி பூக்கள் அலங்காரத்துடன் வண்ண விளக்குகளுடன் வானவேடிக்கையுடன் மேளதாளம் இசைக்க வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் வடிவேல் சோமு யாதவ், துணைத் தலைவர் எம். செந்தில்நாதன் யாதவ், செயலாளர் ஆர். சீனிவாசன் யாதவ், இணைச் செயலாளர் ஆர். மனோகரன் யாதவ், பொருளாளர் கே. கே. கதிரவன் யாதவ், மற்றும் கடலூர் மாவட்ட ,வட்ட, துறைமுக யாதவ பெருமக்கள், கடலூர் துறைமுகம் ஊர் முக்கியஸ்தர்கள், மற்றும் நகர் பொதுமக்கள், செய்திருந்தனர்.


