தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்கம் சந்திப்பு.
தமிழ் நாடு பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களை தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் சங்க மாநில தலைவர் . தேவ. முரளி, மாநில பொது செயலாளர் பா. தில்லைக் குமரன், மாநில துணைத் தலைவர் . செந்தில், . மணிகண்டன், கண்ணன், மாநில நிர்வாகிகள் ரவி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்க உறுப்பினர் நலன் வேண்டி சந்தித்தார்கள்.
இதில் கல்வித்துறை அலுவலகப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலும், அவற்றிற்கு விரைந்து தீர்வு காணும் நோக்கிலும் ஒரு சந்திப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கல்வித்துறை பணியாளர்களின் அன்றாடப் பணிகளையும், எதிர்கால நல்வாழ்வையும் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான துறை சார்ந்த பல கோரிக்கைகள் இணை இயக்குநரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டன.
பல்வேறு நிலைகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் தடையற்ற மற்றும் வெளிப்படையான முறையில் பொது மாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னுரிமை அடிப்படையில் , உரிய விதிமுறைகளின்படியும்,வெளிப்படையான முன்னுரிமைப் பட்டியலின் (Priority List) அடிப்படையிலும் பதவி உயர்வு அளித்திட சங்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு நியாயமான* *கோரிக்கைகளைக் கவனமோடும் கேட்டு கேட்டறிந்த இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி ) அவர்கள், சட்டமன்ற கூட்டம் முடிவுக்கு பின்னர், பொது மாறுதல்,பதவி உயர்வு ஆகியவை விதிகளின் படியும், பணியாளர்கள் நலன் பதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தாக உறுதி அளித்தார்.
அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசிடம் பெற்று வழங்க வேண்டிய, பணியாளர் நலன் கருதிய ஆணைகளை பெற்று வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் நிர்வாகிகளின் தொடர் முயற்சியும், துறை உயர் அதிகாரிகளின் நேர்மறையான பதிலாலும் கல்வித்துறை அலுவலகப் பணியாளர்கள் மத்தியில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பும் வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.
இச்சந்திப்பு கல்வித்துறைப் பணியாளர்களின் நலனைக் காப்பதில் சங்கத்தின் உறுதியான செயல்பாட்டிற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.விரைவில்
நமது சங்கம் சார்பாக, பல்வேறு கோரிக்கைகளை பெற்றிருக்கும் வகையில், விரைவில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களையும், மாண்புமிகு கல்வித்துறை செயலர் அவர்களையும் சந்திக்க உள்ளோம்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தோடு இணைந்து நமது கோரிக்கைக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் சந்திக்க உள்ளோம் என்பதையும் இந்த நேரத்தில் மிக சந்தோஷத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


